ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்
இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் மக்களுக்கு ஆடை ஆபரணங்களின் மீதான மோகம் என்பது குறைந்ததாக தெரியவில்லை. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலையானது இவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலையானது சீராக அதிகரித்த வண்ணமே தொடர்ந்து வருகிறது. அதாவது இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது 40,750 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்றைய தேதியில் அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது 45,810 ரூபாயாக வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதியன்று 24 கேரட் தரத்திலான 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது 43,660 ரூபாய் என்று விற்பனையாகி கொண்டிருந்தது. ஆனால் அடுத்த ஏழு தினங்களுக்குள் தங்கத்தின் விலையானது அடுத்ததாக மீண்டும் ஒரு உச்சத்தைத் தொட்டது. அதாவது இந்த மார்ச் 06 ஆம் தேதியன்று அதே 24 கேரட் தரத்திலான 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது 46,160 என்கிற உச்ச விலையைத் தொட்டு விற்பனையாகி கொண்டிருக்கிறது.
ஏறக்குறைய இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் மார்ச் 06 ஆம் தேதி வரையிலான தங்கத்தின் விலை ஏற்றத்தை கணக்கிட்டால், குறிப்பாக இந்த 66 தினங்களில் தங்கத்தின் விலையானது சுமார் 13.2 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டுள்ளது. அடுத்ததாக கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் மார்ச் 06 ஆம் தேதி வரையிலான இந்த ஏழு நாட்களுக்குள் தங்கத்தின் விலையானது ஏறக்குறைய 5.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து கொண்டு வந்த தங்கத்தின் விலையானது தற்போது ஓரளவு நிலைபெற்றுள்ளது. அதாவது கடந்த மார்ச் 06 ஆம் தேதியன்று 46,160 ரூபாய்க்கு விற்ற 24 கேரட் 10 கிராம் தங்கமானது, மார்ச் 10 ஆம் தேதியான இன்று 45,810 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அனைவருக்கும் பிடித்த தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது நடுத்தர மக்களின் மனதில் கவலையை உண்டாக்கியுள்ளது.