சற்றுமுன்: 9 நாட்களுக்கு மட்டும் தான் பள்ளிகள் செயல்படும்!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!
ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுப்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர்.ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பு தேதியை ஒத்திவைத்தனர். அந்த வகையில் ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என கூறிய நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்பட்டதால் ஜூன் 14 ஆம் தேதியாக மாற்றி அமைத்தனர்.
இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்ய தற்பொழுது சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் செயல்படும் என உத்தரவிட்டனர்.அந்த வகையில் எந்தெந்த சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் செயல்படும் என்பது குறித்து புதுச்சேரி அரசாணது அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றாம் தேதி ஜூன் மாதம் விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய 24ஆம் தேதி சனிக்கிழமையும் அதேபோல 2/6/2022 அன்று விடப்பட்ட விடுமுறைக்கு 8 ஆம் தேதியும் இவ்வாறு விடுமுறை நாட்களுக்கு ஏற்ப பள்ளிகள் நடைபெறும் என கூறியுள்ளனர்.
இதேபோல விடுப்பு அளித்த ஒவ்வொரு தினத்திற்கும் அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை தினத்தன்று பள்ளிகள் செயல்படும் என அட்டவணையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் ஒன்பது நாட்கள் விடுப்புக்கு ஒன்பது சனிக்கிழமை மட்டுமே பள்ளிகள் நடைபெறும் எனதெரிவித்துள்ளது மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாடத்திட்டங்கள் முடிப்பதற்கு அதிகமாக உள்ளதால் அதனை விரைந்து முடிக்கவே அனைத்து மாநில அரசுகளும் இவ்வாறு பள்ளிகள் செயல்படும் என கூறியுள்ளனர்.இதேபோல தமிழகத்திலும் மாணவர்களுக்கு சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் நடைபெறும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.