யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!!

0
286
#image_title

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!!

இந்த வெயில் காலத்தில் நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை கட்டாயமாக உண்ண வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் நாம் உண்ணப்படும் பொருட்களில் ஏதாவது குளிர்ச்சி உள்ள பொருளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக வெயில் காலம் வந்துவிட்டால் நாம் அதிக அளவில் தண்ணீரை குடிப்போம். அதனைப் போன்று வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதும் மிகவும் நன்று. பொதுவாக இளநீரை அதிகளவில் காலை நேரத்தில் தான் குடிப்பார்கள் ஏனென்றால் இதில் அதிக அளவு உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றும் சத்துக்களும் நிறைந்தது. இவ்வாறு இந்த பயனுள்ள இளநீரை யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.

1: பொதுவாக அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் அதாவது அவர்களின் உடம்புக்கு ஒத்துக்காத பொருட்களை சாப்பிட்டு அலர்ஜி வருகின்றது என்பது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த இளநீரை குடிக்க வேண்டாம் ஏனென்றால் சில சமயங்களில் இந்த இளநீர் அந்த அலர்ஜியை இன்னும் அதிகமாக்கும்.

2: இளநீரில் அதிக அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இதனை கட்டாயம் கொடுக்க கூடாது அவ்வாறு அவர்கள் சாப்பிட்டார்கள் என்றால் உயிருக்கு ஆபத்து வருவதற்கு கூட வாய்ப்புண்டு.

3: சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த இளநீரை சாப்பிட வேண்டாம் ஏனென்றால் இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

5: குளிர்ச்சியான உடல் உடல்நிலை கொண்டவர்கள் இந்த இளநீரை குடிக்காமல் தவிர்ப்பதே மிகவும் நன்று ஏனென்றால் ஏற்கனவே குளிர்ச்சியான உடல் நிலை உள்ளவர்கள் இந்த இளநீரை உட்கொள்வதன் மூலம் அவர்களின் உடல் மேலும் குளிர்ச்சி அடைந்து காய்ச்சல் ,இருமல் ,சளி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

6: சிலர் இதனை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிப்பார்கள் அது மிகவும் தவறு ஏனென்றால் இளநீரில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையால் வயிறுகளில் புண்கள் ஏற்படும். அதனால் காலை நேரத்தில் இளநீரை குடிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

7: இதனை அடுத்து முக்கியமாக கருதப்பட வேண்டியது என்னவென்றால் இளநீரை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும் இல்லையென்றால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் குறைந்து விடும் மற்றும் தொற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளும் ஏற்படும்.

இவ்வாறு இளநீர் பயனுள்ளதாக இருந்தாலும் அதனை யார் குடிக்க வேண்டும் என்றும் யாரெல்லாம் குடிக்க வேண்டாம் என்றும் தெரிந்துள்ளோம்.

சில பொருட்கள் மிக நன்மையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தாலும் அது சிலருக்கு தீமையாக இருக்கவும் வாய்ப்புண்டு அதனால் எந்த ஒரு பொருளையும் உண்பதற்கு முன்பு அது நம் உடலுக்கு நன்மையா என்று அறிந்த பின்பே உண்ண வேண்டும் அது நன்மை தரக்கூடிய பொருளாக இருந்தாலும் சரி தெரிந்த பின்பு உண்ணுங்கள்.

Previous articleதினமும் மல்லி விதைகளை ஊற வைத்து குடிங்க!! அப்புறம் பாருங்க எல்லா பிரச்சனையும் காணாம போயிடும்!!
Next articleபலவீனமாக உணர்கிறீர்களா? பாலில் இந்த இரண்டு பொருளை சேர்த்து சாப்பிடுங்க!!