வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!!

வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!!

ஜூலை மாதம் 2023 ஆண்டுக்கான விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே வங்கிக்கு 2வது  சனிக்கிழமை மற்றும் 4 வது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வந்த அறிவிப்பின் படி ஜூலை மாதம் மட்டும் 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

RBI விடுமுறை காலண்டர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி வழக்கம் போல் 2வது  சனிக்கிழமை,  4 வது சனிக்கிழமை விடுமுறை  மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

அதனையடுத்து ஜூலை 5 குரு  ஹர்கோவிந்த் ஜி பிறந்தநாள் அன்று ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகள் இயங்காது. ஜூலை  6 MHIP நாள் அன்று மிசோரமில் வங்கிகள் இயங்காது. ஜூலை 11 கேர் பூஜை திரிபுராவில் வங்கிகள் இயங்காது. ஜூலை 13 பானு ஜெயந்தி சிக்கிமில் வங்கிகள் இயங்காது. ஜூலை 17 யுடிரோட் சிங் டே மேகாலயாவில் வங்கிகள் இயங்காது. ஜூலை 21 Drukpa Tshe-zi  சிக்கிமில் மற்றும் ஜூலை 28 ஆஷீரா ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகள் இயங்காது.

மேலும் ஜூலை 29 ஆம் தேதி முஹரம் (தாஜியா) திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், உ.பி, வங்காளம, புது டெல்லி, பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் வங்கிகள் இயங்காது என்று அறிவித்துள்ளது.