டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு!! தேர்வர்கள் கவனத்திற்கு!!

டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு!! தேர்வர்கள் கவனத்திற்கு!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் டிஎன்பிஎஸ்சி உதவி ஜெய்லர் பதவி  பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது.தற்பொழுது இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் உதவி ஜெயிலர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு மட்டும் மொத்தம் 59 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் 12ம்  தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

காலிப்பணியிடங்கள் உள்ளது என்று அறிவித்த நாள் முதல்  இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பின்பு விண்ணப்பம் பெரும் கடைசி நாள் சென்ற மே மாதம் 11 ம் தேதி வரை இருந்தது.

இந்தநிலையில் ஜூலை 1 ம் தேதி இதற்கான தேர்வு நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.தற்பொழுது இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தேர்வர்கள் அரசு கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று அவர்களது ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதனை பதிவிறக்கம் செய்ய முதலில் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கொடுத்துள்ள tnpsc.gov.in  இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

பின்பு அந்த பக்கத்தில் உள்ள அசிஸ்டன்ட் ஜெயிலர்  ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.அதனை தொடர்ந்து  உங்களின் பதிவு எண் மற்றும் கடவு சொல்லை உள்ளிட வேண்டும்.

அதன்பின் தேர்வர்கள்  உங்களது ஹால் டிக்கெட்யை பதிவிறக்கம் செய்து அதனை பிரண்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டும்.