10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.
இதனால் அப்போது வினாத்தாள்களும் மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வினாத்தாளில் பல சிக்கல்கள் இருந்துள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மிக கடினமாக இருந்து வந்தது.
இந்த வினாத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. மொத்தம் 35 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி இதில் அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் 15 மதிப்பெண் மற்றும் தியரி 20 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
அந்த மாற்றம் செய்யப்படட்ட வினாத்தாளில் இரண்டு மதிப்பெண் வினாக்கள் குறைக்கப்பட்டும் ஏழு மதிப்பெண் அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்ட வினாத்தாள் முறை மீண்டும் மாற்றியமைக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.
மேலும் வினாத்தாள் மாற்றத்தின் போது இரண்டு மதிப்பெண் வினாக்கள் அதிகமாகவும், ஏழு மதிப்பெண் வினாக்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். மேலும் ஏழு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலாக ஐந்து மதிப்பெண் வினாக்களாக மாற்றியும் அமைத்தால் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த ஆண்டிற்குள் வினாத்தாள் மாற்றி அமைத்தால் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.