ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!!
நாம் அனைவரும் நமக்கு தேவையான ஆவணங்களை உதாரணமாக சொத்து சம்மந்தமான ஆவணங்கள், திருமண சான்றிதழ்கள் முதலியவற்றை பத்திரப்பதிவு துறையில் பெற்றுக்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் பெறப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பல பேர் மோசடியில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதை தடுக்கும் விதமாக தற்போது ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் சொத்து மற்றும் திருமண சான்றிதழ்களை திருத்த முடியாமல் நிரந்தர ஆவணமாக மாற்ற நம்பிக்கை இணையம் என்ற தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தகவல் தொழில்நுட்ப துறையின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணுமயமாக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் முத்திரை இடுவதை நோக்கமாகக் கொண்டு இருப்பதால், இதை முன் தேதியிட்டு மாற்றவோ, திருத்தவோ முடியாது.
மே ஒன்றாம் தேதிக்குப் பின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இதில் எந்த மாற்றமோ, திருத்தமோ செய்ய இயலாது.
நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் திருத்த முடியாத நிரந்தர ஆவணமாக மாற்ற வேண்டும் என்று பத்திரப்பதிவுத் துறை ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு முழுக்க முழுக்க ஆவணங்கள் திருத்துவதில் நடக்கும் மோசடியை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இதன்படி, இனி பத்திரங்களில் எந்த ஒரு தேதி மாற்றமோ, பெயர் மாற்றமோ என எதுவும் செய்யப்பட இயலாது என்று கூறப்படுகிறது.