ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

0
227
No more free rice dal in ration shops!! People of Tamil Nadu are in shock!!
#imaNo more free rice dal in ration shops!! People of Tamil Nadu are in shock!!ge_title

 ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது.

இதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வந்த நிலையில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் பருப்பு பதுக்க படுவதாகக தகவல் வெளிவந்த நிலையில் இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இருப்பினும்  இந்தியாவில் பருப்பு மற்றும் உளுந்து போன்றவற்றின் கொள்முதல் குறைந்து கொண்டே வருகின்றது அதனால் அதன் விலையும் அதிகரித்துள்ளது.

இதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பின் இருப்பு நிலையை கண்டறிந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் வழி செய்திட வேண்டும் என்று மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

இதனைதொடர்ந்து பருப்பை பதுக்குவோர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முறையாக பருப்பு வழங்கப்படுகிறதா என்று அரசு கண்காணித்து வருகின்றது. அதிலும் மத்திய அரசின் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசியை மத்திய அரசே இலவசமாக வழங்கி வருகின்றது.

மேலும் மற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி இந்திய உணவு கழகத்திடம் இருந்து தமிழக நுகர்வோர் வாணிப கழகம் வாங்குகிறது. இந்தநிலையில் திடீரென்று அரசி ,பருப்பு போன்ற பொருட்களின் விநியோகம் நின்று விட்டதால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Previous articleமுதல்வர் அறிவித்த குட் நியூஸ்!! சிறு குறு நடுத்தர தொழில் நிறுவங்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு
Next articleஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!