பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி நேற்று இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளி என்ற இடத்தில் யாரும் இல்லாத இருட்டில் வைத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
முதலில் போலீசாருக்கு மேட்டூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பின் கொலை செய்யப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர்.
அதனையடுத்து போலீசார் விரைந்து அவர் உடலை மீட்டு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது சிபி பொற்றோர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் சிபி மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.
போலீசார் விசாரணையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற கருமலைக்கூடல் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது ராஜேஷ் என்பவர் கொலை கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிபிக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிவந்ததுள்ளது.
மேலும் இந்த கொலை பழிக்குப் பழிவாங்க செய்த சம்பவம் என்று போலீசார் சந்தேககின்றார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.