பீகார் அரசு தற்போது மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கு மாடர்ன் உடைகள் அதாவது, ஜீன்ஸ், டி. சர்ட் ஆகிய உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இவ்வாறு உடை அணிவது கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு பீகார் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிர்வாக இயக்குனரான சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார்.
எனவே மாநிலக் கல்வித்துறை வெளியிட்ட இந்த உத்தரவில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற உடைகள் அணிவதை தவிர்த்து முறையான உடைகளை அணிய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அலுவலகத்திற்கு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் இது போன்ற சாதாரண உடையில் வருவதை கண்டறியப்பட்டு அதற்காக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பீகார் அரசு கல்வித்துறை ஊழியர்களுக்கு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
எனவே பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியில் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களும் முறையான கலாச்சார உடையில் வர வேண்டும்.
மேலும் கண்ணியத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறியுள்ளனர்.