வாயு (கேஸ்) தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? உடனே நீங்க எளிய வீட்டு வைத்தியம்!!
நமக்கு இருக்கக்கூடிய அந்த சிறிய வயிறு தான் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக உள்ளது. இதற்காகத்தான் வயிறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் கூறி வருவார்கள்.
நம் அனைவரும் கஷ்டப்படும் ஒரு பிரச்சனை என்னவென்றால் வாயு தொல்லை அதாவது கேஸ்ட்ரிக் பிரச்சனை. இந்தப் பிரச்சினையை மாத்திரைகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வீட்டில் செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் மருந்தை இங்கு அறிவோம்.
செய்முறை:
இதை செய்வதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கிளாஸ் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். இந்த தண்ணீர் சிறிது வெதுவெதுப்பாக சூடான உடன் இதை பருகவும். இவ்வாறு வெதுவெதுப்பான சுடுநீரை பருகுவதால் நமது வயிற்றில் உள்ள அழுக்குகளும் கசடுகளும் நீங்கி வாயு தொல்லையில் இருந்து நம்மை விடுவிக்கும்.
இவ்வாறு வெறும் சூடான தண்ணீரை குடிக்க பிடிக்காதவர்கள் இதனுடன் இரண்டு ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் இதனுடன் இரண்டு லவங்கத்தை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வரலாம். இவ்வாறு கொதிக்க வைத்து குடிக்க முடியாதவர்கள் இரண்டு ஏலக்காயை அப்படியே வாயில் போட்டு சாப்பிட்டு வரலாம்.
இவ்வாறு செய்வதால் இந்த ஏலக்காயின் சாறு நமது வயிற்றிற்கு சென்று வாய் தொல்லையிலிருந்து உடனடியாக நமக்கு விடுவிப்பை கொடுக்கும். இதே போல் வெந்நீரில் அரை ஸ்பூன் அளவு ஓமத்தை போட்டு காய்ச்சி குடித்தாலும் இந்த வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
இந்த கேஸ் ட்ரக் பிரச்சனை வராமல் நாம் வயிற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம். பொதுவாக இந்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். நன்றாக பசி எடுத்த பிறகு சாப்பிட வேண்டும் சாப்பிடும் போது இடையில் தண்ணீரை பருகவே கூடாது.
இந்த வாய் தொல்லை பிரச்சனை உள்ளவர்கள் இரவு உணவிற்கு பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. நாம் என்ன சாப்பிட்டாலும் நன்றாக மென்று சாப்பிட்டால் 50 சதவிகித ஜீரணம் நம் வாயில் உள்ளேயே நடந்து முடிந்து விடும்.
அதுவே மெல்லாமல் நாம் விழுங்கி விட்டால் ஆகாரம் ஜீரணம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இது போன்ற வாய் தொல்லையில் இருந்து விடுபட வெந்நீரில் ஏலக்காயையோ அல்லது ஓமத்தையோ சேர்த்து இவ்வாறு குடித்து வர இந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபடலாம்.