காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்!! இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீர்கள்!!
காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாள் முழுவதற்குமான ஆற்றலை கொடுக்கக்கூடியது காலை உணவு என்று எல்லோருக்கும் தெரியும். உடல் எடை குறைக்க கலோரிகள் குறைந்த உணவுகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வரலாம்.
உடல் எடை குறைக்க, உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால், காலையில் நீங்கள் விரும்பும் எதையும் உங்களால் சாப்பிட முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? துரதிர்ஷ்டவசமாக, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சில உணவுகள் நமக்கு மிகவும் நல்லதல்ல என்பதை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
எனவே காலையில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பதை நாம் பார்ப்போம்.நமது ஆரோக்கியத்திலும், உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதிலும் நாம் உண்ணும் உணவுகள் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பது நாம் அறிந்ததே.
படிப்பு,வேலை நேரம் ஆகியவை காரணமாக நமது உணவு வகைகள் மாறுவதோடு, நேரத்திற்கு சாப்பிடாமல் அதற்கான கால அட்டவணையும் நமது வசதிக்கேற்ப மாற்றப்படுகிறது.
காரணம் காலையில் வயிறு காலியாக இருப்பதால் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நேரடியாக வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இதனால் வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.
எனவே வெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாது என்று சில உணவுப் பொருட்கள் உள்ளதை நாம் எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிட்டால் அவை விஷமாக மாறி உடல் உபாதைகளை உண்டாக்கும்.
1: தக்காளியை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் டான்னிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
2: காரமான உணவுகள் ஏற்கனவே இருக்கும் செரிமான சிக்கல்களை மேலும் மோசமாக்கும்.
3: வெறும் வயிற்றில் இருக்கும்போது மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி போன்ற காரமான உணவுகளை உண்ண வேண்டாம்.
4: வெறும் வயிற்றில் இனிப்பு வகைகளை சாப்பிட்டால் இன்சுலின் உற்பத்தியை பாதித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும். மேலும் இது உங்கள் வயிற்றில் உள்ள அமிலங்கள் மற்றும் காரங்களின் சமநிலையை சீர்க்குலைக்கின்றன.
5: நம்மில் பலர் எந்த கால நேரத்திலும் குளிர்பானங்களை குடிக்க நினைப்போம். வெறும் வயிற்றில் குளிர்பானங்களை குடிப்பது ஒரு ஆபத்தான விஷயமாகும். இதனால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரித்து வயிறு வீக்கம் ஏற்படும்.
6: வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற இரசாயனம் கலந்த குளிர்பானங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன. வைட்டமின் சி அதிக அளவு இருந்தாலும் கூட வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடக் கூடாது.
7: இவற்றில் அதிகளவு உள்ள பழ அமிலங்கள் அமிலத்தன்மை மற்றும் இரைப்பை அழற்சி அதிகரிக்கிறது.
8: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டுள்ளதால் நெஞ்செரிச்சல், எரிச்சல் மற்றும் பிற இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுகிறது.