இனி விசாவே தேவையில்லை!! வெளிநாட்டுக்கு பறந்து செல்லலாம்!!
ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் நிறைய நாட்டிற்கு செல்வதை பொறுத்து அந்த பாஸ்போர்ட்டை பவர்ஃபுல் பாஸ்போர்ட் என்று கூறுவார்கள். அந்த வகையில் தற்போது நம் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து இந்தோனேசியா ஸ்ரீலங்கா போன்ற 60 நாடுகளுக்கு செல்லலாம்.
இந்த பவர்ஃபுல் பாஸ்போர்ட் வரிசையில் இந்தியா 87 வது இடத்தையும் முதலிடத்தை ஜப்பானும் பெற்றுள்ளது. இந்த ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் 191 நாடுகளுக்கு செல்ல முடியும். இதில் இரண்டாம் இடத்தில் இருப்பது சிங்கப்பூர்.
இந்த நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இந்த பாஸ்போர்ட் பெறுவதற்கு சரியான வழியில் சென்று பெற வேண்டும். போலி பாஸ்போர்ட் தயாரித்து அதை பயன்படுத்தினால் அது குற்றமாகும்.
இவ்வாறு போலி பாஸ்போர்ட் செய்தவர்களை பிடித்து சிறையில் அடைத்து வருகின்றனர். தற்போது மதுரையில் கூட இது போன்று 128 பேருக்கு போலியான பாஸ்போர்ட்டை வழங்கியுள்ளனர். இதனால் நம் நாட்டிற்கே ஆபத்து வரும் வாய்ப்பு உள்ளது.
ஒரு வெளிநாட்டவருக்கு போலி பாஸ்போர்ட் வழங்குவதன் மூலம் அவர் வெளிநாட்டிற்கு சென்று தவறான வழியில் ஈடுபட்டால் அது பாஸ்போர்ட் வழங்கிய நம் நாட்டிற்கு ஆபத்து விளைவிக்கும். இவ்வாறு போலி பாஸ்போர்ட் தயாரித்தால் பாஸ்போர்ட் சட்டத்தின்படி 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணம் கட்ட வேண்டும்.
மேலும் ஒரு வருடத்தில் இருந்து ஐந்து வருடங்களுக்கு சிறை தண்டனையும் தரப்படும். இந்த பாஸ்போர்ட்டில் மூன்று வகைகள் உள்ளது. முதல் வகை ஆர்டினரி பாஸ்போர்ட் ( ordinary passport) அதாவது சாதாரண மக்களுக்கு கொடுக்கப்படுவது. இரண்டாவது அபிஷியல் பாஸ்போர்ட் ( official passport ) அதாவது அரசு பணியாளர்களுக்கு தருவது.
மூன்றாவது டிப்ளமேடிக் பாஸ்போர்ட் ( diplomatic passport) அதாவது அரசு பணியில் உள்ள தலைமை அதிகாரிகளுக்கு கொடுப்பது.