சற்று முன்: ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி!! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
234

சற்று முன்: ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி!! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த வாரத்திலிருந்து தக்காளி விலையானது கிலோ ரூ 130 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த விலையே தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தக்காளி வாங்குவதில் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல தக்காளியையும் வழங்க ஆலோசனை செய்ய உள்ளனர்.

உற்பத்தியாளர்களிடமிருந்து தக்காளியை கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் மக்களுக்கு உதவி புரியும் வகையில் மலிவு விலையில் கொடுக்கலாம் என தலைமை செயலகத்தில் இன்று இதர கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையின் பிறகு மலிவு விலையில் நியாய விலை கடைகளிலேயே தக்காளி கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பட்சத்தில் சாமானிய மக்கள் பெரிதும் பயனடைவர்.

அதேபோல குறிப்பிட்ட ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டும்தான் இந்த மலிவு விலையில் தக்காளி வழங்கப்படுமா அல்லது அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு கார்டுக்கும் இத்தனை கிலோ தான் தக்காளி என்று அரசு நிர்ணயிக்குமா என்ற கேள்வியும் அடுத்தடுத்து எழுந்து வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டும் தான் இந்த குழப்ப நிலை நீங்கும் என கூறுகின்றனர்.

Previous articleடிகிரி முடித்திருக்கிறீர்களா!! TCS நிறுவனத்தின் சூப்பரான வேலை வாய்ப்பு!!
Next articleBreaking: தலைமறைவான பாஜக முக்கிய புள்ளி!! வலைவீசி தேடும் போலீஸ்!!