Breaking: தலைமறைவான பாஜக முக்கிய புள்ளி!! வலைவீசி தேடும் போலீஸ்!!

0
64

Breaking: தலைமறைவான பாஜக முக்கிய புள்ளி!! வலைவீசி தேடும் போலீஸ்!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் லெப்ட் ஆண்டாக இருக்கும் எஸ் ஜி சூர்யா கடந்த மாதம் திடீரென்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாஜகவானது ஆளும் கட்சியை குற்றம் சாட்டி வருவதோடு ஒவ்வொரு நபரையும் விமர்சனம் செய்தும் வருகின்றது.

அந்த வகையில் எஸ் ஜி சூர்யா  தூய்மை பணியாளர் இறப்பிற்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தான் இதற்கு காரணம் என்றும் இதை அறிந்து எம்பி வெங்கடேசன் மௌனம் காக்கிறார் என்றும் சர்ச்சைக்குரிய விதமாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு எஸ் ஜே சூர்யா பதிவிட்டதை அடுத்து பொய்யான தகவலை பரப்புவதாக இவர் மீது எம்பி வெங்கடேசன் வழக்கு தொடுத்தார். இது மட்டும் இன்றி இதுபோல பல சர்ச்சைக்குரிய பதிவுகள் பொய்யானவையாக இவர் பரப்பி அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதாக இவர் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்தது.

இந்த புகார்கள் வைத்து எஸ் ஜி சூர்யா கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமினில் வெளியே வந்தவர் அவ்வபோது காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

இதனால் எஸ் ஜி சூர்யா மதுரையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி கையெழுத்து போட்டு வந்தார். சில தினங்களாகவே அவர் கையெழுத்து போட வரவில்லை அவர் தங்கி இருக்கும் அறையிலும் அவரை காணவில்லை.

இதனால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதால் மீண்டும் அவரை கைது செய்து சிறையில் அடைக்கலாம் என கூறுகின்றனர்.