இந்தியாவில் கொரோனாவால் முதல் பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தகாக கூறப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் முறையான பரிசோதனை எதுவும் நடத்தபடாமல் இருந்ததால் அதனை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணம் என்பதை தெரிவிக்க மறுத்து வந்தனர்.
அதற்கடுத்து நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் மரணம் அடைந்த கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர், கொரோனா வைரஸ் தாக்குதலால் தான் பலியானார் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இவருடைய மரணம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நடந்த முதல் பலி என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் பாதிப்பு இல்லை என்ற ஆறுதலில் இருந்தாலும் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.இதனையடுத்து தற்போது கர்நாடக மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முதல் பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்று அவர் தனிமை வார்டுக்கு அனுப்பப்படுவார் ”என்று கல்பூர்கியின் துணை ஆணையர் ஷரத் பி கூறி உள்ளார்.
மேலும் கர்நாடக மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பி ஸ்ரீராமுலு இன்று வெளியிட்டுள்ள அவருடைய ட்விட்டர் பதிவில் “கர்நாடகாவில் இன்று கொரோனா பாதிப்பு மேலும் 2 அதிகரித்து உள்ளது. மொத்த உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த 20 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புடன் கலபுரகிக்கு வந்து இறந்த நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது. இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ” என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.