காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷ்னர் போட்ட கடிவாளம்!! இனி இதற்கு தடை!!
காவல்துறை அதிகாரிகள் பணியின் போது தொலைபேசியை உபயோகிக்க கூடாது என்று சில நாட்களுக்கு முன்பாகவே அறிவுறுத்தப்பட்ட நிலையில் காவல் ஆணையர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பந்தோஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையில் இருக்கும் காவலர்கள் வேலை நேரத்தில் தொலைபேசியை உபயோகிப்பதால் அவர்களின் பணியை சரிவர செய்ய முடிவதில்லை.
இதனால் பல குற்றங்கள் நடப்பதற்கு வழிவகை செய்து விடுகிறது. எனவே இதனையெல்லாம் தடுக்க கட்டாயம் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படும் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் இருக்கும் காவலர்களிடம் இது குறித்து விரிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறு பணி நேரத்தின் போது செல்போன் உபயோகிப்பதால் அவர்களுக்கு பணியில் கவன சிதறல் ஏற்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து துறையில் உள்ளவர்கள் இவ்வாறு செய்வதினால் விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டுகொள்ளாமலேயே விட்டு விடுகின்றனர்.
இதுவே விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் போக்குவரத்தில் உண்டாகும் நெரிசல் என அனைத்தையும் முறையாக கவனிக்க இயலும். அதுமட்டுமின்றி கோவில் எனத் தொடங்கி தலைவர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் செல்போன் உபயோகிக்கவே கூடாது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உபயோகிக்கும் சிறு வினாடியில் கூட பெரும் விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே பணியின் போது முறையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.