முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கைகள்

0
261

முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கைகள்

திருப்பதி என்ற பெயரை அறியாதவர் இந்தியாவில் இருக்க முடியாது ஏன் உலக அளவில் பேசப்படும் ஒரு திருத்தளமாக விளங்குவது திருப்பதி ஏழுமலையான் கொவில். நாளொன்றுக்கு சுமார் ஒருலட்சம் மக்கள் கூடும் திருத்தலமாக இருப்பது திருப்பதியே.

கொரோனா வைரஸின் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற நாள்தோரும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மக்கள் அதிகம் பொதுவெளியில் கூட வேண்டாம் என அறிவுறுத்தியதோடு மட்டும் இல்லாமல் அவ்வாறு கூடவும் பல்வேறு கட்டுப்பாடுகளையும்
விதித்துள்ளது.

கொரோனோ வைரஸ் கட்டுப்பாடுகளால் திருப்பதியில் தினம் தினம் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான செயலாகவே அனைத்து தரப்பு மக்களாலும் பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இனி பக்தர்கள் யாரும் காத்திருப்பு அவையில் தங்கவைக்கப் போவது இல்லை. இனி பக்தர்கள் தங்களது ஆதார் கார்டை வைத்து தங்களுக்கான தரிசன நேரத்தை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதைப்போலவே 300 ரூபாய் தரிசனம் மற்றும் திவ்ய தரிசனம் போன்ற அனைத்துமே குறித்த நேரத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் பக்கதர்கள் கூட்டம் மிதமிஞ்சி காணப்பட்ட திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைந்து பேருந்துகளும், கடைவீதிகளும், மோட்டைபோடும் இடம், அன்னசத்திரம் என அனைத்து இடங்களும் பக்தர்கள் இல்லாமல் இருப்பது புதுவிதமாக உள்ளது என திருப்பதிவாசிகள் கூறுகின்றர்.

Previous articleஉலகை அச்சுறுத்திய கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு
Next articleஅனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here