தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் நடத்த வேண்டும்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!
காமராஜர் தமிழகத்தின் முன்னால் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பள்ளியில் மாணவர்கள் படிக்க வர வேண்டும் என்பதற்காக முதலில் மத்திய இலவச உணவு திட்டம் என்பதை அறிமுகப்படுத்தினார். ஏழை மக்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார்.
இவ்வாறு கல்விக்காக இவர் செய்த நலத்திட்டங்கள் ஏராளம் என்பதால் அவரது பிறந்தநாளான ஜூலை 15 ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 15 ம் தேதி மாணவர்களுக்கு என்று பல போட்டிகள் நடத்தப்பட உள்ளது.இதில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
வருகின்ற ஜூலை 15 ம் தேதி காமராஜர் பிறந்த நாள். வருடம் தோறும் இவர் பிறந்தநாளில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்படும்.அதிலும் குறிப்பாக பள்ளிகளில் இவர் பிறந்த நாள் சார்பில் பல போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த வருடமும் பல போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் பள்ளிகளில் இவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக பள்ளிகளில் அவர் பிந்தநாளின் போது அவர் படத்திற்கு மரியத்தை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி, பல்வேறு போட்டிகள் அவரது பெயரில் நடத்தி பரிசளித்து வருகின்றனர்.
அதனைபோன்று வருகின்ற ஜூலை 15 ம் தேதி பள்ளிகளில் மாணவர்களின் திறனை வெளிபடுத்தும் விதமாக ஓவியம், பேச்சு போட்டி ,கட்டுரை போட்டி, கவிதை போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.