உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..???
உலக அளவில் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று தனி முத்திரை பதித்து புகழ் பெற்ற மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘சாடியோ மானே” தனது உடைந்து போன செல்போன் குறித்து ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான சாடியா மானே எங்கு சென்றாலும் தனது உடைந்து போன பழைய ஐபோனுடன்தான் செல்கிறார். ஒரு வாரத்திற்கு மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பில் 140 மில்லியன் சம்பாதிப்பதாக கூறப்படும் இவர், உடைந்துபோன ஐபோனை பயன்படுத்துவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பேட்டியின் போது உடைந்துபோன செல்போனை பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு அவர் கூறிய பதில் பின்வருமாறு;
நான் நினைத்தால் உடைந்துபோன எனது செல்போனை உடனடியாக சரி செய்ய முடியும். அதுமட்டுமல்ல விலை உயர்ந்த கார்களையும், ஜெட் விமானங்களையும், தங்கம் மற்றும் வைர கடிகாரங்களையும் வாங்க முடியும். வாங்கலாம் என்பதற்காக இதையெல்லாம் நான் எதற்காக வாங்க வேண்டும்.? சிறுவயதில் வறுமையை அனுபவித்துள்ளேன் என்னால் படிக்க முடியவில்லை என்பதால் தற்போதைய மாணவர்களுக்காக பள்ளிக்கூடத்தை உருவாக்கியுள்ளேன்.
ஒரு நேரத்தில் விளையாடுவதற்கு காலணி இல்லை, சரியான உணவு இல்லை. இன்று எல்லா வசதிகளையும் விளையாட்டின் மூலம் பெற்றுள்ளேன். நல்லவர்போல் நடிப்பதை விட என் மக்களுக்கு உண்மையாக இருக்கிறேன் என்று அவர் கூறினார். பணம் இருக்கிறது என்பதற்காக எதையும் வாங்க கூடாது. தேவை இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தின் மூலம் சாடியோ மானே கூறியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.