இந்தியா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் எதிரி!! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அதிரடி பேட்டி!!

Photo of author

By Jeevitha

இந்தியா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் எதிரி!! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அதிரடி பேட்டி!!

பாபர் ஆசம்  பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆவார்.  உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராக இவர் உள்ளார். இவர் தற்போது பேட்டி ஒன்றில் இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல, உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடப் போகிறோம் என்று கூறினார்.

இந்தியாவுடன் மட்டுமின்றி எட்டு அணிகளுடன் நாங்கள் விளையாட வேண்டும். இந்த அனைத்து  அணிகளுடன் விளையாடி வென்றால் தான் நாங்கள் இறுதிப்போட்டிகளில் விளையாட முடியும். மேலும் நாங்கள் குறிப்பிட்டு எந்த அணிகள் மீதும் கவனம் செலுத்தவில்லை என்றும் எங்களுக்கு கவனம் முழுவதும் உலகக் கோப்பையை வெல்லுவதுதான் எங்கள்  லட்ச்சியமாக உள்ளது என்று கூறினார்.

அதனையடுத்து அவர் நாங்கள் இறுதிப் போட்டிகளில் விளையாட வேண்டுமெனில்  அனைத்து அணிகளுடனும் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து  அவர் ஒவ்வொரு மைதானத்திலும் தட்பவெப்ப நிலைகள்  மற்றும் ஆடுகள நிலை மாறுபடும் என்றும் அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டிகள் அக்டோம்பர் 15 ஆம் தேதி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறயுள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையான போட்டிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பார்கள்.

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை மொத்தம் ஏழு போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.