டிரென்ட் ஆகும் படையப்பா நீலாம்பரி கொரோனோவில் இருந்து தப்பிக்க வழி இதுதான்

0
269

டிரென்ட் ஆகும் படையப்பா நீலாம்பரி கொரோனோவில் இருந்து தப்பிக்க வழி இதுதான்

இன்றைக்கு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள பெயர் கொரோனா. இந்த வைரஸ் தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்காத நிலையில் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாக உலகம் முழுவதும் கூறப்படுவது மக்களை தனிமைப்படுத்தி நோய் பரவுவதை தடுப்பது மட்டுமே.

இதனை அடுத்து இந்தியாவிலும் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருதிறது.நேற்று இரவு இந்திய மக்களிடையே உறையாற்றிய இந்திய பிரதமர் மோடி அவர்களுள் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் வரும் ஞாயிறுக் கிழமை அன்று மக்கள் தாங்களாகவே ஊரடங்கை ஒரு பரீட்சார்த்த முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தற்போது மீம் கிரியேட்டர்கள் கையில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு தனிமை என்றவுடன் நினைவுக்கு வந்தது படையப்பா பட நீலாம்பரி கதாப்பாத்திரம். படையப்பா படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன் அவர்கள் ரஜினியை காதலித்து இருப்பார். ஆனால் ரஜினி அவரை விரும்பாத காரணத்தால் அவர் தன்னை பல ஆண்டுகள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வார்.

அதைப் போலவே நாமும் நம்மை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் கொரோனோ தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மீம்ஸ் போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Previous articleதிருமாவளவனை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பரபரப்பு விவாதம்
Next articleவிரட்டிய கொரோனா; அரைகுறை ஆடையுடன் மொட்டை மாடிக்கு ஓட்டம் பிடித்த கத்ரீனா : வெளியான வீடியோவை பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here