கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!!

0
38

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!!

நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை.

ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் நிலைமை மிகவும் மோசமாகும்.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கால் வலி என்பதை சாதாரணமாக கொண்டிருக்கிறார்கள். தினசரி இந்த வலியை வழக்கமாகவே கொண்டிருப்பவர்களும் உண்டு.

கால்வலி மந்தமாகவோ, கடுமையாகவோ, கூர்மையாகவோ இருக்கலாம். தாங்கமுடியாத அளவுக்கு வலி உபாதையை தரலாம்.வலிகளில் வித்தியாசம் போன்று இவை வருவதற்கான காரணங்களும் பல உண்டு.

ஊட்டச்சத்து குறைபாடு, தசை பிடிப்பு, பலவீனமான தசை, நின்று கொண்டே இருப்பது, நரம்பு சார்ந்த பிரச்சனைகள், சமயங்களில் நீரிழிவு இருப்பவர்களுக்கும் கூட இந்த கால்வலி உபாதை உண்டாகும். கால்வலி வரும் போது எளிமையான வீட்டு வைத்தியங்களும் உண்டு. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

இந்த கால் வலிகளுக்கு தீர்வே கிடையாதா என்று பலர் புலம்புவார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கால் வலிகளுக்கு இயற்கையாகவே எளிதில் தீர்வு காணலாம். அதைப் பின்பற்றினால் நிச்சயம் கால் வலியில் இருந்து விடுபடலாம்.

தேவையான பொருட்கள்

ஆமணக்கு எண்ணெய்

விளக்கெண்ணெய்

எலுமிச்சை பழம்

செய்முறை

1: முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.

2: இதேபோன்று சுத்தமான விளக்கெண்ணையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3: இவற்றுடன் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதில் பாதி அளவை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4: இவை அனைத்தும் சேர்ந்த கலவையை நன்றாக கலக்கி ஒரு பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை எந்த பகுதிகளில் வலிக்கின்றதோ அதாவது கை கால் போன்ற இடங்களில் வலி ஏற்பட்டால் இந்த பேஸ்டை அதில் தடவி சில மணி நேரங்கள் அப்படியே விடவும்.அதன் பின்பு அந்த இடத்திலிருந்து வலி காணாமல் போய்விடும்.