கால்வாயில் கவிழ்ந்த பஸ்!! திருமண விருந்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!!
திருமண விருந்துக்கு சென்ற பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போதுபஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொடிலிஎன்ற பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்றின் விருந்து உபசரிப்பு நிகழ்வில் கலந்துக் கொள்ள சென்றவர்கள் அந்த பஸ்சில் சென்றனர். அந்த பஸ்ஸில் சுமார் 35 முதல் 40 பேர் வரை பயணித்து சென்றனர். அந்த பஸ் தர்சி நகர் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து உள்ளது.
திடீரென நிகழ்ந்த விபத்தில் பஸ்சின் உள்ளே இருந்தவர்கள் சிக்கி அலறியுள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் அப்துல் அஜீஸ் வயது 65, அப்துல் ஹனி வயது 60, ஷேக் ரமீஸ் வயது 48, முல்லா நூர்ஜஹான் வயது 58, முல்லா ஜானி பேகம் வயது 65, ஷேக் சபீனா வயது 35, மற்றும் ஷேக் ஹீனா வயது 6 ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
இறந்த அனைவரும் மற்றும் பஸ்சில் பயணம் செய்தவர்கள் பொடிலி கிராமத்தினைச் சேர்ந்தவர்கள். விபத்து பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கால்வாயில் பஸ் கவிழ்ந்து 7பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுனர் அசதியில் தூங்கியது விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.