மருத்துவப் படிப்புகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! 35 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்களுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இது ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டது. இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள் ஜூலை மாதம் பத்தாம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில்,
நேற்றுடன் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. ஆனால் இதுகுறித்து மாணவர்கள் கால அவகாசத்தை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
எனவே, இந்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நாட்கள் நாளை மாலை ஐந்து மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 24 ஆயிரத்து 127 பேரும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 11 ஆயிரத்து 249 பேரும் என மொத்தம் 35 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பிக்கும் நாள் நாளையுடன் முடிவடையும் நிலையில், இது குறித்து உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு இதற்கான தரவரிசைப் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
எனவே, இதற்கான கலந்தாய்வை விரைவில் துவங்குவது குறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது.
இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கால அவகாசம் அதிகரிக்கப்பட்டதை அடுத்து மேலும் எண்ணிகை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.