இனி காய்கறிகள் வாங்க கடைக்கு செல்ல வேண்டாம்!! வீடு தேடி வரும் முதல்வர் அதிரடி உத்தரவு!! 

இனி காய்கறிகள் வாங்க கடைக்கு செல்ல வேண்டாம்!! வீடு தேடி வரும் முதல்வர் அதிரடி உத்தரவு!!

தமிழ்நாடு அரசு தற்போது எல்லாம் மக்களுக்கு வசதியாக இருக்க பல திட்டங்களைவும் செயல்படுத்தி  வருகிறது. அதனை தொடர்ந்து தனி தனியாக ஒவ்வொரு துறையிலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி தமிழகத்தின் சந்தை பொருட்களை நேரடியாக வீட்டிற்கு சென்று விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி கடைகள் குறித்து  ஆலோசனை நடத்தி வருகிறது.

ஏற்கனவே இந்த மாதம் coop bazaar என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. அதன்  மூலம் ஆர்டர் செய்தால் வீட்டிலிருந்து நேரடியாக பொருட்கள் வாங்கி கொள்ள முடியும். இந்த புதிய செயலியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.  மேலும் இந்த செயலி மூலம் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வீட்டில் இருந்தபடியே வாங்கி கொள்ள முடியும்.

இதில் எண்ணெய், பருப்பு வகைகள் , மாவு, மசாலா, அரிசி,  பூஜைப்பொருட்கள், விவசாயத்திற்கு தேவையான உயிர் உரங்கள, பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்கள் இதன் மூலம் வாங்கிகொள்ளலாம்.

அதனை தொடர்ந்து சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இது குறித்து நேற்று தமிழக முதலவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளில் காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்க மற்றும்  தமிழக உணவு பொருள் வணிக கழகத்தின் மூலம் கொள்முதல் செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த துறை  அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இது மட்டுமின்றி அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்கவும், தமிழக முழுவதும் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனை அதிகப்படுத்த வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது.  மேலும் ஏற்கனவே கொரோனா காலங்களில் நடைமுறைப்படுத்தபட்ட நடமாடும் காய்கறி கடைகளை தற்போது  தொடங்க வேண்டும். இதனை மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை மூலம் விரைவில் தொடங்க வேண்டும். இது குறித்து அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.