கோவில் திருப்பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!!

0
37
Rs.50 crore deferred for temple restoration!! Presented by Chief Minister Stalin!!
Rs.50 crore deferred for temple restoration!! Presented by Chief Minister Stalin!!

கோவில் திருப்பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!!

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோவில்களின் திருப்பணிகாக ரூ. 50  கோடி கொடுத்துள்ளார்.

அந்த பகுதியில் மட்டும் மொத்தம் 2500 கோவில்கள் உள்ளது. இதன் திருப்பணிக்காக சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில் தல ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் என்ற அடிப்படையில் முதல்வர் வழங்கினார்.

நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் 1000 கோவில்களின் திருப்பணிக்கு தலா ரூ. 1 லட்சம் என்று ஒதுக்கப்பட்ட நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இருந்து கோரிக்கை எழுப்ப பட்டதன் காரணமாக இதனை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இதனை நிறைவேற்றும் விதமாக தற்பொழுது 2,500  கோவில்களுக்கு  தலா 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின்  வழங்கினார்.

இந்த நிகழிச்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ச.வெ.கணேசன் ,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,திறன் மேம்பாட்டு துறை தலைவர்கள்.தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ,சுற்றுல்லா ,பண்பாட்டு மற்றும் அறநிலையத்துறை  முதன்மை செயலாளர் க.மணிவாசன்,இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அலுவலர் ஜே.குமரகுருபரர் போன்ற பலர் இதில் கலந்து கொண்டனர்.

இவர்களின் முன்னிலையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள காசோலையை சமந்தப்பட்ட கோவில்களின் நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

author avatar
Parthipan K