முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கான விதிமுறைகள்!!

0
173

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கான விதிமுறைகள்!!

தமிழக அரசு தற்போது முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் எவ்வாறு வாங்குவது அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை முற்றிலும் ஆக வெளியிட்டுள்ளது. இந்த முதல் பட்டதாரி சான்றிதழானது tnpsc டிஆர்பி போலீஸ் தேர்வு முதலியவற்றிற்கு பயன்படாது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக அவர்கள் எந்தெந்த வேலைக்கு இந்த சான்றிதழ் பயன்படும் என்று நிரப்புகிறார்களோ அதற்கு மட்டும் தான் இந்த முதல் பட்டதாரி சான்றிதழை பயன்படுத்த முடியும். இது தவிர்த்து போட்டி தேர்வுகள் போன்றவற்றிற்கு இந்த முதல் பட்டதாரி சான்றிதழை உபயோகப்படுத்த முடியாது. இந்த ஆண்டில் தான் இதற்கான தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது அதை இங்கு பார்ப்போம்.

1. அதாவது ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் படித்து வருகின்றன என்றால் அதில் முதல் நபர் கட்டண சலுகையோடு பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்னும் பட்சத்தில் இரண்டாவது பிள்ளை கட்டண சலுகை இல்லாமல் படித்து பட்டம் பெற்றிருந்தால் அவர்களே முதல் பட்டதாரிக்கு உரியவர் ஆவர்.

2. இரண்டு பிள்ளைகளில் யார் முதலில் பட்டம் பெறுகிறார்களோ அவர்களே முதல் பட்டதாரி உரிமைக்கு உரியவர் ஆவார். எனவே இரண்டு பிள்ளைகளில் யார் முதலில் கல்லூரியில் செல்கிறார்கள் என்பது கிடையாது யார் முதலில் பட்டம் வாங்குகிறார்களோ அவர்களே முதல் பட்டதாரிக்கு உரியவர் ஆவார்.

3. ஒரு குடும்பத்தில் முதல் பிள்ளை ஐந்து ஆண்டுகால படிப்பை படித்து வருகிறார் மற்றும் இரண்டாவது பிள்ளை மூன்று ஆண்டுகால படிப்பை படித்து வருகிறார் என்றால் இரண்டாவது பிள்ளையே முதலில் பட்டம் வாங்குவார் எனவே அவரே முதல் பட்டதாரிக்கு உரியவர் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இருவருமே ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தால் யார் முதலில் அந்த பட்டத்தை பெறுகிறார்களோ அதாவது மாதத்தை கணக்கில் கொண்டு முதல் பட்டதாரி உரிமையை வழங்க வேண்டும். மேலும் இருவருமே ஒரே ஆண்டு ஒரே மாதத்தில் பட்டம் வாங்குகிறார்கள் என்றால் முதல் பிள்ளைக்கு முதல் பட்டதாரி உரிமையை அளிக்க வேண்டும்.

4. முதல் பிள்ளை பட்டம் வாங்கிய பிறகு ஏதேனும் ஒரு காரணத்தால் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் இரண்டாம் பிள்ளைக்கு இந்த முதல் பட்டதாரி உரிமை அளிக்கப்படும்.

5. கூட்டுக் குடும்பமாக வாழும் குடும்பங்களில் யார் முதலில் பட்டம் பெறுகிறார்களோ அவர்களுக்கே முதல் பட்டதாரி உரிமை அளிக்கப்படும்.

6. மிகவும் நாட்கள் கழித்து படித்திருந்தாலுமே இந்த முதல் பட்டதாரி உரிமையை வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

7. இந்த முதல் பட்டதாரி சான்றிதழை வாங்குவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் படித்து முடித்து பல வருடங்கள் கழித்தும் இந்த டிகிரி சான்றிதழை நிச்சயமாக பெற்றுக் கொள்ளலாம்.

8. இந்த முதல் பட்டதாரி சான்றிதழை பெறுவதற்கு ஆண்டும் ஒரு தடை கிடையாது எந்த ஆண்டில் நீங்கள் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும் இப்பொழுது முதல் பட்டதாரி உரிமையை பெற்றுக்கொள்ளலாம்.

9. இரட்டை குழந்தைகளாக பிறந்துள்ளவர்கள் இரண்டு பேருமே முதல் பட்டதாரி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இந்த முதல் பட்டதாரி சான்றிதழை எவ்வாறு பெறுவது என்பதை காண்போம். இதை இ-சேவை மையம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவையான ஆவணங்களான புகைப்படம், முகவரிக்கான மாற்று சான்றுகள், மனுதாரரின் மாற்றுச் சான்றிதழ் அல்லது வேலை வாய்ப்பு அட்டை, மனுதாரரின் பெற்றோர் மற்றும் உறுதிமொழி படிவம், பெற்றோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, மனுதாரரின் கல்வி சான்றிதழ்கள் முதலியவை தேவை.

மனுதாரர் இந்த ஆவணங்களை பயன்படுத்தி இ சேவை மையத்தில் ஆன்லைனில் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பித்த பிறகு கிராம நிர்வாக அலுவலர் இந்த ஆவணங்களை சரி பார்ப்பர். இவரை தொடர்ந்து இந்த விவரங்கள் RI க்கு அனுப்பப்படும் அவர்கள் இது சரியாக இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.

இவற்றை எல்லாம் சரிபார்த்த பின்னர் நமக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமாக தகவல் வரும். எனவே இதன்பிறகு இ சேவை மையம் சென்று நம்முடைய முதல் பட்டதாரி சான்றிதழை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Previous articleஇதோ உங்களுக்கான பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்பு!! புதிய அதிரடி அறிவிப்பு!!
Next articleFlipkart நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!