ரசிகர்கள் எதிர்பார்த்த வேட்டையாடு விளையாடு பாகம் 2!! படத்தின் பணிகள் தொடக்கம்!!

ரசிகர்கள் எதிர்பார்த்த வேட்டையாடு விளையாடு பாகம் 2!!  படத்தின் பணிகள் தொடக்கம்!!

கமல் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் விக்ரம்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து கமல் எப்பொழுது எதோ காலில் பம்பரம் சுற்றியது போலா சுற்றி கொண்டே இருந்தார்.

இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் நீண்ட காலமாக இழுவையில் இருந்த படம் இந்தியன் 2 தற்பொழுது இந்த படத்தின் படபிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது.

அந்த வகையில் நடிகர் கமல் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.அதிலும் 2006 ம் ஆண்டு  கமல் அவர்களின் நடிப்பில்  “வேட்டையாடு விளையாடு” என்னும் படம்  வெளிவந்தது.இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கினார்.இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக “ராகவன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இது திரில்லர் பாணியில் உருவான வெற்றி படமாகும்.இந்த படமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்து  வேட்டையாடு விளையாடு  நவீன முறையில் ஜூன் 23 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வெளியான இரண்டாவது முறையும் வசூலை அள்ளி குவித்ததால் இப்படத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் மற்றும் இயக்குனர்  கௌதம் மேனன் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த படம் இப்பொழுது மட்டும்மல்லாமல் அப்பொழுது உள்ள ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த மறு வெளியீட்டின் மூலம் இதன் பாகம் 2 வேண்டும் என்று ரசிகர்கள் கௌதம் மேனனிடம் கோரிக்கை எழுப்பினர்.

அந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கௌதம் மேனன்  கூறியது ,வேட்டையாடு விளையாடு பாகம் 2 ன் கதையை கமல் சாரிடம் சொல்லிவிட்டேன் என்றார்.

அவருக்கும் கதை மிகவும் பிடித்துள்ளது என்றும் துருவ நட்சத்திரம் படத்திற்கு பின்பு இதன் 2 ம் பாகம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.