பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!!

Photo of author

By CineDesk

பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!!

இமாசல பிரதேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை வெள்ளத்தில் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இங்கு இது வரை நூறு பேர் காயமடைந்து, 88 பேர் மழையால் இறந்து, மேலும் 16 பேர் மாயமாகியும் உள்ளனர்.

இவர்களுக்கு யாரும் உதவாத நிலையில், ஜேஜேபி என்னும் ஜனயாக் ஜனதா கட்சியின் எம்எல்ஏ ஈஸ்வர் சிங் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பார்வையிட வந்தார். இது பாஜக வின் ஒரு கூட்டணி கட்சியாகும்.

அங்கு வசிக்கும் மக்கள் இவருக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில், கூட்டத்தில் ஒரு பெண் இவர் கன்னத்தில் அறைந்து இப்பொழுது மட்டும் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கூறினார்.

வெள்ளம் வருவதற்கு முன்னதாகவே நடவடிக்கைகளை செய்திருந்தால் எங்களுக்கு இப்பொழுது இந்த நிலைமை வந்திருக்காது என்று மக்கள் அனைவரும் அவரிடம் கோவத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து எம்எல்ஏ ஈஸ்வர் சிங் பேசியதாவது, மழை வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற போது மக்கள் என்மீது தாக்குதல் நடத்தினர். நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருந்தால் அணை உடைவதை தடுத்திருக்க முடியும் என்று கூறினார்.

அவர்களிடம் இது சீற்றத்தால் நடந்த ஒரு நிகழ்வு என்று கூறி விளக்கமளித்ததாக தெரிவித்துள்ளார். எம்எல்ஏ ஈஸ்வர் சிங்கை அந்த பெண் கன்னத்தில் அறைந்து கேள்வி கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்பாலா உள்ளிட்ட பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேப்போல் குல்லா பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.