குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா!! அலட்சியம் வேண்டாம் கவனமாக இருங்கள்!!

0
108

குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா!! அலட்சியம் வேண்டாம் கவனமாக இருங்கள்!!

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் அப்படியே விட்டுவிடுவார்கள்.

காரணம்:

ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் யோசித்திருக்க மாட்டார்கள்.

சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும்.

குழந்தைகளின் நரம்பில் ஏதேனும் குறை இருந்தாலும் இந்த சிறுநீர் கழிக்கும் அறிகுறிகள் உண்டாகும். எனினும் இது தீவிரமானனவை அல்ல. நீங்கள் இதை உணர்ந்து கவனித்தாலே குழந்தைகள் சரியாக கூடும்.

குழந்தைகளுக்கு காபின் நிறைந்த உணவுகளை தருவதால் சிறுநீர் அதிகமாக வெளியேற காரணமாகிறது. ஒவ்வாமை பொருட்கள் குழந்தைகளுக்கு பதட்டதை உண்டாக்கி சிறுநீர் வெளியேற வைக்கும்.

தீர்வு:

பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தைகளை சீரான இடைவெளியில் அதாவது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும். பிறகு படிப்படியாக அதிகரித்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பது வழக்க படுத்தலாம்.

குறிப்பாக காபின் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது தவிர்க்க வேண்டும்.

இதை அனைத்தையும் மீறி குழந்தை நொடிக்கு ஒரு முறை சிறுநீர் கழித்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Previous articleபாரதியார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!
Next articleஅட இனி விசா தேவை இல்லை!!   வெளிநாடுகளுக்கு சுலபமாக செல்லலாம் ஹேப்பி நியூஸ்!!