பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த ரவிச்சந்திர அஷ்வின்!! குவியும் வாழ்த்துக்கள்!!
கிரிக்கெட்டில் உள்ள ஒரு பிரபல பந்து வீச்சாளர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஷ்வின் ஆவார். இவர் இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் மொத்தம் 486 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
மேலும், இவர் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திலும் மற்றும் ஆல்ரவுண்டர்-களுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முதல் டெஸ்ட் போட்டியில் 141 ரன்களை பெற்று இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளரான அஷ்வின், தன்னுடைய முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்களும் பெற்று மொத்தமாக 12 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இதனால், இவர் டெஸ்ட் மேட்சிகளில் 486 விக்கெட்களும் மற்றும் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் எல்லாம் சேர்த்து மொத்தம் 709 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்தவர்களின் பட்டியலில் இருந்த ஹர்பஜன் சிங்கின் விக்கெட் எண்ணிக்கையை முறியடித்து அஷ்வின் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இதற்கான முதல் இடத்தில் அனில் கும்ப்ளே 953 விக்கெட்களை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், அஷ்வின் அதிக முறை ஐந்து விக்கெட்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், இதில் 67 முறை ஐந்து விக்கெட்களை கைப்பற்றி முரளிதரன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.