Breaking News, National, News, Politics

மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!!

Photo of author

By Parthipan K

மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!!

Parthipan K

Updated on:

Button

மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!!

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படும் காயம் அடைந்துள்ளனர். மேலும் 60 ஆயிரம் பேர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வீடுகள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த இரண்டு மாதங்களாக பழங்குடியின மக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.

மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இந்த வன்முறை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு தீர்மானத்தை தீர்மானித்து உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்த தீர்மானமானது காலனித்துவத்தின் பிரதிபலிப்பு என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய உள்நாட்டு விவகாரங்களில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பிரதமர் மோடி பிரான்சில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்க அவருக்கு உயரிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. பின்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டு சென்றார். இதனை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியீட்டுள்ள பதிவில், இங்கே மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டின் உள்நாட்டு விவகாரத்தை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானிக்கிறது. ஆனால் பிரதமரோ ஒரு வார்த்தை கூட வன்முறையை பற்றி பேசாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என சாடியுள்ளார்.

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை!! பக்தர்கள் சாமி தரிசனம்!!

இன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!!