ஒரு நாள் முதல்வன் போல்!! ஒரு நாள் அரசு ஊழியர் ஆக வேண்டுமா??

0
44

ஒரு நாள் முதல்வன் போல்!! ஒரு நாள் அரசு ஊழியர் ஆக வேண்டுமா??

ஒரு நாள் முதல்வன் என்ற திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம் ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமா என்று பலரிடம் கேட்டால் அது எப்படி முடியும் அது வெறும் படம் தானே என்று கூறுவார்கள்.

அந்த படத்தில் அர்ஜுன் அவர்கள் நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களையும் விதிமீறல்களையும் கண்டறிவது போன்று செயல்பட்டு இருப்பார்.

சாமானிய மக்களாகிய நம்மால் அரசையோ அரசு ஊழியர்கள் செய்யும் குற்றத்தையும் விதிமீறல்களையும் கண்டறிய முடியுமா என்று கேட்டால் கட்டாயம் முடியும்.

பொதுமக்களாகிய உங்களால் கட்டாயம் ஒரு நாள் அரசு ஊழியராக பணியாற்ற முடியும்.
இது சாத்தியமா என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் கட்டாயம் சாத்தியம்.

எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமோ? அனைத்து விவரங்களும் இந்த பதிவில் கூறப்படும்.
இதற்காக அரசால் இயக்கப்பட்டது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இது 2005 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதில் RTC section 2 (j) இந்த சட்டத்தின்படி ஒரு நாள் முழுவதும் நம்மால் அரசு ஊழியர் ஆக இருக்க முடியும்.

அப்படி நீங்கள் ஒரு நாள் முழுவதும் அரசு ஊழியராக இருக்க வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக அனுமதி கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும்.

நீங்கள் அனுமதி பெற்று விட்டீர்கள் என்றால் உங்கள் ஊரில் உள்ள நகராட்சி ஆபீஸ் கூட்டுறவு சங்கம் நமக்கு பட்டா வழங்கும் தாலுகா ஆபிஸ் மற்றும் ரேஷன் கடை போன்ற அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரு நாள் முழுவதும் நீங்கள் அரசு ஊழியர் ஆக பணியாற்ற முடியும்.

இப்படி பொதுமக்கள் ஆகிய நம்மாளும் நாட்டில் நடக்கும் குற்றங்களையும் விதிமீறல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

அரசாங்கம் சரியில்லை என்று சொல்வதை விட நமக்கான அதிகாரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு அதனை சரி செய்வது குடிமக்களாகிய நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.