கவனம் மக்களே!! ஜூலை மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!!

0
110
Attention people!! Bank holidays on these days in July!!
Attention people!! Bank holidays on these days in July!!

கவனம் மக்களே!! ஜூலை மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!!

பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.

இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது.

அந்த வகையில் வங்கி சேவை என்பது தினசரி வாழ்க்கை பயன்பாட்டில் இன்றியமையாததாக மாறி விட்டது. அதனால்  வங்கிகள் அனைத்தும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் எல்லாம் வழக்கம் போல் இயங்கும்.

பண பரிவர்த்தனை செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் எந்த நாட்களில் எல்லாம் வங்கிகள் விடுமுறை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இந்த ஜூலை மாதம் மட்டும் 7 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது .அவைகளில் ,

  • 17/07/23 ம் தேதி யு டிரோட் சிங் தினம் என்பதால் அதனை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது.
  • 21/07/23 ம் தேதி ட்ருக்பா ஷே சிக்காக காங்கடாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • 22/07/23 ம் தேதி  நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.
  • 23/07/23 ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்படுகின்றது.
  • 28/07/23 ம் தேதி ஆஷிரா காஷ்மீர் வங்கிகளுக்கு விடுமுறை.
  • 29/07/23 ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது.
  • 30/07/23 ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.
Previous articleகுடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000!! உடனடியாக பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள்!!
Next articleஇன்னும் 6 நாட்கள் தொடரும் மழை மீனவர்களுக்கு எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம்!!