10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!! 

0
81
He touched it in less than 10 seconds!! It is not that kind of touching, the shocking verdict given by the court!!
He touched it in less than 10 seconds!! It is not that kind of touching, the shocking verdict given by the court!!

10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!! 

மாணவி ஒருவரின் சம்மதம் இல்லாமல் காவலாளி அவரை தீண்டிய வழக்கில் பாலியல் தொடுதல் இல்லையென நீதிமன்றம் அதிர்ச்சியான தீர்ப்பு வழங்கியுள்ளது.மாணவியின் சம்மதம் இல்லாமல் தொட்டது உண்மை  என ஒத்துக் கொண்ட காவலாளி வேடிக்கையாக செய்ததாக கூறியுள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த17 வயது  மாணவி 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கு சென்றபோது வகுப்பறைக்கு செல்லும் வழியில் உள்ள மாடி படிக்கட்டில் ஏறும்போது திடீரென யாரோ தன்னை பின்பக்கதிதில் தொட்டு கீழாடையை கழட்டுவது போல உணர்ந்துள்ளார்.

அதிர்வுற்று திரும்பி பார்த்தபோது அந்த பள்ளியின் காவலாளி சிரித்தபடி அன்பே விளையாட்டுக்கு இப்படி செய்கிறேன் என கூறி அசடு வழிந்துள்ளார். இதைகேட்டு கோபமான மாணவி பள்ளி நிர்வாகியான அன்டோனியோ அவோலா என்பவரிடம் புகார் அளித்தார்.

ஆனால் மாணவி சம்மதம் இன்றி வேடிக்கையாக செய்ததாக உண்மையை காவலாளி வெகு இயல்பாக கூறியுள்ளார்.ஆனால் இந்த வழக்கு விவகாரம்  நீதிமன்றம் வரை சென்றது. மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய காவலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று இவ்வழக்கு விசாரணையின்போது மாணவி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட காவலாளியை சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் “மாணவியை காவலாளி 10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் ரீதியாக சீண்டி உள்ளார். அதை குற்றமாக கருத முடியாது” என கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பு இத்தாலி மக்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியதுடன், கொஞ்ச நேரம் தொடுதல் என்ற தலைப்பில் டிக்டாக்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தீர்ப்பு பற்றி மாணவி கூறுகையில் பள்ளி நிர்வாகமும், நீதிமன்றமும் தமக்கு அநீதி இழைத்துவிட்டதாக கருதுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.”இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படவில்லை. இதன் மூலம், நாட்டின் நீதி பரிபாலன முறையை நம்பியது தவறு என்பதை உணர தொடங்கி இருக்கிறேன்எனக் கூறினார்.

மேலும் அவர் சத்தம் போடாமல்  அருகில் வந்து பின்புறமாக என்னை தொட்ட காவலாளி, எனது கீழாடையை இழுத்துவிட்டு, என்னை இறுக பற்றித் தூக்கி, அந்தரங்க உறுப்புகளை தொட்டுத் துன்புறுத்தி உள்ளார். இது ஒன்றும் வேடிக்கையான விஷயம் அல்ல. வயதான ஒருவர் ஒரு இளம்பெண்ணிடம் இப்படியெல்லாம் விளையாடக் கூடாது” என மிகுந்த வருத்தமாக தெரிவித்தார்.

Previous articleஇந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றம்!! ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு ஓய்வு!!
Next articleஅரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!