இனி ஐபோன் பயன்படுத்த தடை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இப்போது உள்ள தலைமுறைகள் அனைத்தும் ஆண்டிராய்டு போனிலேயே எந்நேரமும் நேரத்தை செலவழிக்கின்றனர். எப்போதுமே அதை கையில் வைத்தபடியே அனைத்தையும் செய்கின்றனர்.
அதிலும் முக்கியமாக இக்கால இளைஞர்கள் அனைவரும் ஆப்பிள் ஐபோனை வாங்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கின்றனர். உலகத்தில் எத்தனையோ ஆண்டிராய்டு மொபைல்கள் வந்தாலும், இந்த ஐபோன் மீது அனைவருக்கும் இருக்கும் மோகம் எப்போதுமே குறைவதில்லை.
அப்படிப்பட்ட இந்த ஐபோனை பயன்படுத்துவதற்கு தற்போது ரஷிய நாடு தடை விதித்துள்ளது. அதாவது, ரஷிய நாட்டில் வேலை செய்யும் அனைத்து அரசு அதிகாரிகளும் ஆப்பிள் நிறுவனத்தின் எந்த ஒரு சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று ரஷிய அரசு அறிவித்துள்ளது.
அதிகாரிகள் அரசு பணிக்காக இந்த ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்றும், ஆனால் சொந்த தேவைகளுக்காக இந்த சாதனங்களை பயன்படுத்தி வரலாம் என்று அறிவித்துள்ளது.
ரஷிய நாட்டின் ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனமானது, இந்த ஆப்பிள் மொபைல் போன்கள் மற்றும் ஆப்பிளின் மற்ற சாதனங்களைக் கொண்டு அமெரிக்கா உளவு நிறுவனங்கள் ரஷிய நாட்டை உளவு பார்ப்பதாக குற்றம் கூறி உள்ளது.
இவ்வாறு உளவு பார்த்து நாட்டின் ரகசியங்களை அமெரிக்கா தெரிந்து கொள்ள நினைப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாகவே ரஷிய நாட்டின் அரசு பணியாளர்கள் வேலை தொடர்பான விவரங்களுக்கு ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய ஆப்பிள் நிறுவனமானது, ரஷியா கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும், பயனர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் தனி உரிமையை பாதுகாப்பதே எங்கள் கடமை என்றும் தெரிவித்துள்ளது.