மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகபட்டினத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் போல செயல்பட்டு கொண்டு இருந்தது. அங்கு வழக்கம் போல திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் முகாமில் கலந்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து இருந்தனர்.
அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே திடீர் தீ பற்றி கொண்டது. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 3-வது தளத்தில் உள்ள தமிழ்நாடு கேபிள் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பரவிய தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக மூன்று தளங்களிலும் பணியாற்றி கொண்டிருந்த அலுவலர்கள் உடனடியாக வெளியேறினர்.
இதையடுத்து இந்த தீ விபத்தால் மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு வந்திருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்து தொடர்பாக நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் அளிக்கப் படவே அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் லேப்டாப்,கணினி,மற்றும் பழுதான ஆதார் கருவி ஆகியன எரிந்து சேதம் அடைந்துள்ளன. மேலும் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.