தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத்!! ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வெளிவந்த தகவல்!! 

0
115
Vande Bharat directed to southern districts!! Information released starting in August!!
Vande Bharat directed to southern districts!! Information released starting in August!!Vande Bharat directed to southern districts!! Information released starting in August!!

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத்!! ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வெளிவந்த தகவல்!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வே இயக்கப்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவை. இந்த சேவை ஒரு நாள் நேரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் பகல் நேர ரயில் சேவையாகும். முதலில் இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவை நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ரயில் சேவைகள் 23 பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதனையடுத்து இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி வரை செல்லும் சேவை ஜூலை 7 ஆம் தேதி தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. மேலும் இந்த ரயில் சேவை மற்ற மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது கோரக்பூர் முதல் லக்னோ வரை,  ஜோத்பூர் முதல் அகமதாபாத் வரை மொத்தம் மூன்று சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயிலை சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்க இந்த சேவை தொடங்கப்பட்டது.

அதனையடுத்து ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை இடையே இயக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில் சேவையை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சேவை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விரைவு ரயில்கள் சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்ல 10 மணி நேரம் ஆகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் சேவை 8 மணி நேரத்தில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து திருநெல்வேலியில் இருந்து காலை 6  மணிக்கு புறப்பட்டால் மதியம் 2 மணிக்கு சென்னை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவை விரையில் தொடங்கப்பட உள்ளது.

Previous articleஇன்று முதல் திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை தொடக்கம்!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!!
Next articleவில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!!