சிறுமலை பகுதியில் தொடங்கிய விடுதலை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
விடுதலை பாகம் 1 படம் தமிழ் திரைப்படம் ஆகும். இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி படம் திரையில் வெளிவந்தது. மேலும் இந்த படம் வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும். இந்த படத்தை வெற்றி மாறான் எழுதி இயக்கியுள்ளார். அதனையடுத்து ஆர் எஸ் இந்போடேர்மன்ட் நிறுவனம் தயாரித்தது.
இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். மேலும் முதன்மை கதாபாத்திரமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதனையடுத்து இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் கெளதம் மேனன், சரவண சுப்பையா,பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
இந்த படம் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. இதில் தனது எதார்த்தமான நடிப்பால் தமிழ் மக்களை வியப்பில் ஆள்திருந்தார் நடிகர் சூரி. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. படக்குழு ஏற்கனவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை பாதி முடிந்தது என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி காட்சிகள் நடைபெற உள்ளது.