அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!!
தமிழகத்தில் சட்ட விரோதமாக தினமும் ஏராளமான செயல்கள் நடந்து கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் சட்ட விரோதமாக கோவில் இடங்களை விற்பது ஆகும்.
எனவே, தமிழ்நாட்டில் கோவில் சொத்துக்கள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்கப்பட்டதை பற்றி விசாரணை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை சேகரித்து அந்த சொத்துக்களை விரைவில் மீட்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, குமார் என்பவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய சொத்துக்கு பட்டா வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,
அந்த இடமானது நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி கோவிலுக்கு உரியது என்றும், எனவே, இதற்கு பட்டா வழங்க இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளதாகவும் கூறினார்.
இதனால் இந்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் கூறினார். ஆனால் இந்த செயல் கோவில் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டது என்று இந்து சமய அறநிலையத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
மேலும், அறநிலையத்துறைக்கு தெரியாமல் விற்கப்பட்ட கோவில் நிலங்களை பற்றி விசாரணை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை சேகரித்து விரைவில் அந்த நிலங்களை மீட்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிலரின் இந்த மோசடி செயலினால் பல பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.