உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களா? மாநில அரசு அதிரடி உத்தரவு!!
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல் படுத்தினார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். இதனை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பாதுக்காப்பை மேம்படுத்த தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை தொடங்க உள்ளார்.
அந்த திட்டத்தின் மூலம் இரண்டு பெண்கள் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தைகள் பெயரிலும் 25, 000 ரூபாய் வழங்கப்படும். மேலும் மொத்தமாக 50000 முதலீடு செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற குழந்தைகள் இரண்டு வயதுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதனையடுத்து பெற்றோர்களும் கட்டாயம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
இதன் மூலம் முதலீடு செய்யப்பட தொகையை குழந்தைகள் 18 வயது முடித்த பின்னர் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதனுடன் சேர்த்து வட்டியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். மேலும் இத்திட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சிறப்பு முகாம் நடத்தப்படும். மேலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமைநடத்த திட்டமிட்டுள்ளது.