மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!! 

0
30
Happy news for alcohol lovers !! From now on, if you sell at a higher price, action will be taken!!
Happy news for alcohol lovers !! From now on, if you sell at a higher price, action will be taken!!

மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!! 

இனிமேல் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 எப்போதும்கூடுதலாக வைத்து விற்பதாக அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மேலாண் இயக்குனர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் – மதுபான சில்லறை விற்பனைக் கடை மேற்பார்வையாளர்கள் / விற்பனையாளர்கள் / உதவி விற்பனையாளர்கள் கடமை தவறி பற்றின்றி செயல்பட்டு மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை விட (MRP) கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது – கடுமையான நடவடிக்கை எடுக்க அதில் அறிவுரை கூறப்பட்டு உள்ளது.

அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயித்த விலையை விட ரூ.10 அல்லது அதற்கு கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது.