தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.??

0
142

தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.??

இந்தியா முழுவதும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், அதனை தடுக்கவும் மேலும் பொது மக்களிடையே பரவாமல் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இன்று முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவின் அனைத்து மாநில எல்லைகளும் முடக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலமும் தனிமைப்படுத்தி தன்னை பாதுகாத்து வருகின்றன.

இதன் காரணமாக மத்திய அரசும் மாநில அரசும் மக்களை வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்தில் நகர பகுதிகளில் இருக்கும் விழிப்புணர்வும் எச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக கிராமங்களில் இருப்பதாக தெரியவில்லை. கிராமங்களில் பொதுமக்கள் கொரோனா பாதிப்பின் விளைவை பற்றி புரியாமல் பலர் வழக்கம்போல வேலைக்காக வெளியே செல்வதும், கடைகளில் கூடியும் நிற்கின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவில் இரு கிராமத்து இளைஞர்கள் செய்த செயல் பலரையும் ஈர்த்துள்ளது. எங்கள் கிராமத்திற்கு யாரும் வரவேண்டாம், நாங்களே எங்கள் கிராமத்தை தனிமைப்படுத்தி பாதுகாப்பை உண்டாக்கிக் கொள்கிறோம். சாலையில் மரக் கிளைகள் மற்றும் தடுப்புக்கு தேவையான சுள்ளிகளை வைத்து யாரும் கிராமத்திற்குள் செல்லமுடியா வண்ணம் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த பாதுகாப்பு செயல்பாடு ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் ஜகன்னாத்புரம் மற்றும் ஜூஜ்ஜீரு ஆகிய இரண்டு கிராம சாலையில் உருவாக்கப்பட்ட தடையாகும். பக்கத்து கிராமங்களில் இருப்பவர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி பாதுகாத்துக் கொள்வதாக இளைஞர்கள் கூறுகின்றனர். அரசை எதிர்பார்க்காமல் தன்கையே தனக்குதவி என்பதுபோல் செயல்பட்ட இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Previous articleதவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!
Next articleவாலு’த்தனம் செய்யும் ஷாலு.!! இரவில் ஹாட் படத்தை வெளியிட்டதால் இளைஞர்கள் அறிவுரை! (படம் உள்ளே)