ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய மாற்றம்!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!
பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள் வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர்மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய அரசுகளும் பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கானா அரசானது பயனாளிகளுக்கு புதிய ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது வருகிறது. தற்போது அதனை திருத்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த திட்டம் முதலில் 2 லட்சமாக இருந்தது. தற்போது அந்த திட்டம் 5 லட்சமாக உயர்த்தப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அனைத்து விவரங்களை சரிபார்க்கப்பட்ட பிறகு டிஜிட்டல் கார்டுகள் வழங்க உள்ளது. மேலும் ஆதார் கார்டு மூலம் ஓவ்வொரு பயனாளர்களும் விவரங்களை சர்பார்க்க வேண்டும்.
அதனை தொடர்ந்து ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் கார்டுகள் வழங்கும் போது பயோமெட்ரிக் முறையை பின்பற்றப்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் 5 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.