தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்த விலை ஏற்றபட்டுள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றப்பட்டால் முதலில் பாதிக்க படுவது சாமானியர்கள் தான் என்றும் மேலும் இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டால் இன்னும் அவர்கள் கடுமையான இன்னல்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
அந்த வகையில் இவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பருவ மழை அதிகரிப்பால் விளைச்சல் அனைத்தும் சேதமாகி தக்காளி ,சின்ன வெங்காயம் ,இஞ்சி இவற்றின் இருப்பு முற்றிலும் குறைந்துள்ளது.
இந்த கூட்டத்தில் தொழில் நுட்ப உத்திகளை பயன்படுத்தி கூடுதல் அளவில் தக்காளி உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அதற்காக மண்வளம் மற்றும் உரங்களை மேம்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் மூலம் வெங்காயம் ,தக்காளி போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் காய்கரிகள் சேதம் இல்லாமல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுர்த்தப்பட்டுள்ளது.