அரசு கல்லூரிகளில் 4000 ஆசிரியர் காலி பணியிடங்கள்!! செட் தேர்வு விரைவில் நடத்தப்படும் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

அரசு கல்லூரிகளில் 4000 ஆசிரியர் காலி பணியிடங்கள்!! செட் தேர்வு விரைவில் நடத்தப்படும் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Jeevitha

4000 teacher vacancies in government colleges!! Minister's action announcement that set exam will be held soon!!

அரசு கல்லூரிகளில் 4000 ஆசிரியர் காலி பணியிடங்கள்!! செட் தேர்வு விரைவில் நடத்தப்படும் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே பாடத்திட்டம், தேர்வு, பணி நியமனம் மற்றும் சம்பளம் முறை கொண்டு வரப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நேற்று நடத்த ஆலோசனை கூட்டத்தில் இது பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அதனை தொடர்ந்து கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெறும்  மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை 100% சதவிகிதம்,  மற்ற பாடங்களை 25% சதவிகிதம் ஒரே மாதிரியாக மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டத்து. இதன் மூலம் அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்தி ஒரே நேரத்தில் ரிசல்ட் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது.

மேலும் பேராசிரியர்கள் , ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பளம் ஒரே மாறி வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அரசு கல்லூரிகளில் 4000 ஆசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்படம் என்றும், பேராசிரியார் தகுதி தேர்வான செட் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது போன்ற பல்வேறு பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.