இனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!!
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பெருபாலும் பொருட்களை வாங்கி விட்டு பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வருகிறார்கள். இதிலும் குறிப்பாக யுபிஐ மூலம் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. அதிக அளவில் பண பரிவர்த்தனைகள் ஜெட் வேகத்தில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
பெட்டிக்கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகிறார்கள். மேலும் இதன் பயன்பாடுகள் அசுர வளர்ச்சி அடைந்து வருவதாக தகவல் வந்துள்ளது. அதன் மூலம் பணத்தை சில வினாடிகளில் அனுப்ப முடியும். இந்த சேவை இந்தியாவின் மெட்ரோ நகரம் முதல் குறு கிராமம் வரை யு பி ஐ பயன்பாட்டில் உள்ளது. இதனால் யுபிஐ செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்தியாவில் யுபஐ செயலி சிங்கப்பூர், பூட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து மற்ற நாடுகளில் இந்த சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பிரான்ஸ் நாட்டியில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதனையடுத்து தற்போது இலங்கையிலும் யு பி ஐ பண பரிவர்த்தன சேவைக்கு அனுமதி வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.