இன்று தொடங்கிய அமைச்சரவை கூட்டம்!! மகளிர் உரிமை தொகை முதியோர் உதவித்தொகை குறித்து விவாதம்!!

0
229
Cabinet meeting started today!! Debate on Women's Rights Amount Senior Citizens Allowance!!
Cabinet meeting started today!! Debate on Women's Rights Amount Senior Citizens Allowance!!

இன்று தொடங்கிய அமைச்சரவை கூட்டம்!! மகளிர் உரிமை தொகை முதியோர் உதவித்தொகை குறித்து விவாதம்!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. மேலும் இந்த கூட்டத்தில் தொழில் துறை, மகளிர் உரிமை தொகை மற்றும் சில முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த கூட்டம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றார்கள். மேலும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறை ரீதியான அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க மற்றும் தொழில் நிறுவங்களை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் தற்போது உள்ள நிலை மற்றும் மகளிர் வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் விவாதம் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து  முதியோர் உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1,200 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அரசு மருத்துவர்களின் முரண்பாடு மற்றும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Previous articleகோடிக்கணக்கில் பணத்தை இழந்த அஜித் பட வில்லன் நடிகர்!! அட கடவுளே இவருக்கா?? இந்த நிலைமை!! 
Next articleசெவ்வாய் கிழமை விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!