குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 17 பேர் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!!

Photo of author

By Sakthi

குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 17 பேர் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!!
வங்கதேசம் நாட்டில் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் குளத்தில் மூழ்கி உயிரழந்தனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேருந்து விபத்து நேற்று அதாவது ஜூலை 22ம் தேதி நடந்துள்ளது.
வங்கதேசம் நாட்டில் உள்ள பண்டாரியா உபாசிலா பகுதியில் இருந்து பைரோஜ்பூர் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது உள்ளூர் யூனியன் பரிஷத் அலுவலகம் அருகே ரிக்சா ஆட்டோ ஒன்றுக்கு வழிவிட்டபொழுது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த குளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்லிலேயே உயிரிழந்தனர். 35 பேர் காயமைடந்தனர். மூன்று குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேருந்து விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் ஓட்டுநரின் கவனக்குறைவும் அதிக நபர்களை பேருந்தில் ஏற்றிச் சென்றதும் தான் விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பரிஷால் பிரதேச ஆணையர் எம்.டி ஷவ்கத் அலி அவர்கள் “பயணம் செய்த அனைத்து பயணிகளும் பேருந்தினுள் சிக்கிக் கொண்டனர். அதிக பாரம் ஏற்பட்டதால் பேருந்து உடனடியாக நீரில் மூழ்கியது. 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 35 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.